| வந்த காரியம் |
| விரைந்து முடிந்ததால்... |
| முன்பதிவு செய்த |
| அரசுப் பேருந்துக்கு |
| முழுதாக நான்கு மணி நேரம் |
| மிச்சம் இருந்தது. |
|
|
| காலம் கடத்த... |
| படிக்கவும் |
| குடிக்கவுமாய் ஏற்பாடு |
| நண்பர்களிருவருக்கும். |
|
|
| பாத்து பேரிடம் விசாரித்தால் |
| ஏழு பேர் |
| தெரியாது என்றார்கள் |
| மூன்று பேர் |
| நான் ஊருக்குப் புதுசுங்க!' |
|
|
| அதையும் மீறி |
| அலைந்து திரிந்து |
| ஒருவழியாகக் கண்டுபிடிக்க முடிந்தது |
| அடுத்த தெருவில் இருக்கும் |
| பொது நூலகத்தை! |
|
|
| நண்பனுக்குத்தான் |
| சிரமமே இல்லையாம்... |
| பேருந்து நிலையத்தின் |
| நுழைவு வாயிலிலும் |
| வெளியேறும் வாயிலிலும் |
| பிரதான சாலையிலும் |
| இன்னபிற இடங்களிலுமாய் |
| அரசு மதுக் கடைகள்! |
Friday, November 6, 2009
தேடல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment